ரிஷப் பந்த் ஓபனிங்கில் களமிறங்க வாய்ப்பு

லக்னோ

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அறிமுகமான முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் கடந்த சீசனில் 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை ரிஷப் பந்த் கேப்டன்ஷியில் லக்னோ அணி பில்டப் செய்யப்பட்டுள்ளது. எய்டன் மார்க் ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், மத்தேயு பிரீட்ஸ்கே, டேவிட் மில்லர், ஷமர் ஜோசப் ஆகியோர் வெளிநாட்டு வரவுகள். இதில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஷமர் ஜோசப் மட்டுமே பந்துவீச்சாளர். இதனால் லக்னோ அணி பந்துவீச்சில் முழுமையாக இந்திய வீரர்களின் திறமையை நம்பியே களமிறங்குகிறது.

squad Lucknow

பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவின் இளம் பேட்ஸ்மேன் மத்தேயு பிரீட்ஸ்கே அதிரடியில் மிரட்டக்கூடும். கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுக வீரராக இடம் பெற்று பிரீட்ஸ்கே 150 ரன்களை விளாசி மிளரச் செய்திருந்தார்.

கேப்டன் ரிஷப் பந்த்துக்கு இந்த சீசன் மிகவும் முக்கியம். ஏனெனில் அவர், இங்கிலாந்து டி 20 தொடர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிகிரிக்கெட் தொடரில் இந்திய அணி நிர்வாகத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் இந்திய அணியில் தனது இடத்தை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள ஐபிஎல் தொடரில் அவர், சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Lucknow 2

இந்த சீசனில் ரிஷப் பந்த் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கக்கூடும். அவருடன் மிட்செல் மார்ஷ்ஓபன் செய்யக்கூடும். எய்டன் மார்க் ரம், நிக்கோலஸ் ஆகியோரும் அதிரடியில் மிரட்டக்கூடும். நிக்கோலஸ் பூரன் 2024-ம் ஆண்டில் மட்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற டி 20 தொடர்களில் 74 ஆட்டங்களில் விளையாடி 157.39 ஸ்டிரைக் ரேட்டுன் ஒரு சதம், 15 அரை சதம் என 40.89 சராசரியுடன் 2,331 ரன்கள் குவித்துள்ளார். 160 பவுண்டரி, 170 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

இம்முறை பின்வரிசையில் டேவிட் மில்லர் இருப்பதால் இலக்கை துரத்தும் ஆட்டங்களில் லக்னோ அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். அவருடன் ஆயுஷ் பதோனியும் நம்பிக்கை அளிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ஷாபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த் கூட்டணி லக்னோ ஆடுகளங்களில் முக்கிய பங்குவகிக்கக்கூடும்.

Lsg schdule 1

வேகப்பந்து வீச்சு துறையில் லக்னோ அணியில் இந்திய வீரர்களே முழுமையாக நிறைந்துள்ளனர். அவேஷ் கான், ஆகாஷ் தீப், மயங்க் யாதவ், மோஷின் கான், பிரின்ஸ் யாதவ், அர்ஷின் குல்கர்னி, யுவ்ராஜ் சவுத்ரி ஆகியோரது செயல் திறனை நம்பியே லக்னோ களமிறங்குகிறது. இதில் கடந்த சீசனில் அதிவேகத்தில் பந்து வீசி மிரளச் செய்த மயங்க் யாதவ், மோஷின் கான் ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. எனினும் சர்வதேச அரங்கில் விளையாடிய அனுபவம் கொண்ட அவேஷ் கான், ஆகாஷ் தீப் பலம் சேர்க்கக்கூடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top