ஆர்சிபி அணியில் டிம் ஷெய்பர்ட்

 புதுடெல்லி

 ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக விளையாடி வரும் தொடக்க வீரரான இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல், லக்னோவில் இன்று (23-ம் தேதி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்துடன் வெளியேறுகிறார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவர், தாயகம் செல்கிறார்.

 இதையடுத்து பிளே ஆஃப் சுற்றை கருத்தில் கொண்டு ஜேக்கப் பெத்தேலுக்கு பதிலாக நியூஸிலாந்தைச் சேர்ந்த டிம் ஷெய்பர்ட்டை ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி. நியூஸிலாந்து அணிக்காக டிம் ஷெய்பர்ட் 66 டி 20 போட்டிகளில் விளையாடி 1,540 ரன்கள் சேர்த்துள்ளார்.

 ஆர்சிபி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 27-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் டிம் ஷெய்பர்ட் களமிறங்கக்கூடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top