பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
பிக் பாஷ் லீக் டி 20 தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் – சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டீவன் ஸ்மித் 24, ஜோஷ் பிலிப் 24, மோய்சஸ் ஹென்றிக்ஸ் 24, லச்லான் ஷா 14, ஜோயல் டேவிஸ் 19 ரன்கள் எடுத்தனர்.
பெர்த் அணி சார்பில் ஜை ரிச்சர்ட்சன், டேவிட் பைன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மஹ்லி பியர்ட்மேன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
133 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 44, பின் ஆலன் 36, ஜோஷ் இங்லிஸ் 29 ரன்கள் எடுத்தனர்.
6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்டநாயகனாக பெர்த் அணியின் டேவிட் பைனும், மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் சாம் ஹார்ப்பர் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


The bonuses here are insane! I managed to get a nice win on my first try today. The customer support is also very friendly and helpful. Give phpera789casino a shot!
Honestly, this is one of the most reliable platforms I have used in Bangladesh. The payout process is super fast and the games are top notch. Highly recommend bdjaya9bangladesh for anyone looking for a fair game.
The app installation was a breeze. No glitches and the graphics are top notch. Glad I decided to use newjilislotdownload.