PBKS 3

மும்பையை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்

இங்லிஸ் ஆட்ட நாயகன் * டாப் 3 சஸ்பென்ஸ் நீடிப்பு

ஜெய்பூர்: மும்பை  இந்தியன்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பஞ்சாப் கிங்ஸ் டாப் 2வில் இடம் பெறுவதை உறுதி செய்து அசத்தியது.

PBKS 3

சவாய் மான்சிங் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச… மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 57 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

ரிக்கெல்டன் 27 ரன், கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் ஷர்மா 24, நமன் திர் 20, வில் ஜாக்ஸ் 17 ரன் எடுத்தனர். சாண்ட்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென், விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட், ஹர்பிரீத் பிரார் 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து 20 ஓவரில் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ். பிரப்சிம்ரன் 13 ரன்னில் வெளியேறிய நிலையில், பிரியன்ஷ் ஆர்யா – ஜோஷ் இங்லிஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 109 ரன் சேர்த்தது.

Josh Inglis

ஆர்யா 62 ரன் (35 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), இங்லிஸ் 73 ரன் (42 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாண்ட்னர் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்து 7 விக்கெட்  வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

கேப்டன் ஷ்ரேயாஸ் 26 ரன் (16 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), நெஹல் வதேரா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் சாண்ட்னர் 2, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜோஷ் இங்லிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளியுடன் 4வது இடம் (8 வெற்றி, 6 தோல்வி) பிடித்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ்ஸ் 19 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. எனினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே முதல் 3 இடங்கள் யாருக்கு என்பது உறுதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top