சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகோலஸ் பூரன் குட்பை

போர்ட் ஆஃப் ஸ்பெயின்

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான நிகோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 29 வயதான அவர், ஓய்வுக்கான எந்தவித காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான தேர்விலிருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு நிகோலஸ் பூரன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான பூரன், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 106, டி 20 போட்டிகளில் விளையாடி 2,275 ரன்கள் சேர்த்துள்ளார். அதேவேளையில் 61 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 1,983 ரன்கள் எடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top