டி 20 உலகக் கோப்பையில் கைல் ஜேமிசன்

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. டி 20 உலகக் கோப்பை தொடருக்கான நியூஸிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான ஆடம் மில்னே காயம் காரணமாக விலகி உள்ளார்.

ஆடம் மில்னே கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் விளையாடிய போது இடது தொடை பகுதியில் காயம் அடைந்தார். காயத்தில் குணமடைய நீண்ட காலம் ஆகும் என்பதால் ஆடம் மில்னே, டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் பட்டியலில் இடம் பெற்றிருந்த கைல் ஜேமிசன் பிரதான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top