அனுஷ்காவுடன் ராமர் கோவிலில் விராட் கோலி தரிசனம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

கோவிலில் இருந்து இவர்கள் மாலையுடன் ஜோடியாக வெளியே வரும் படங்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.

இந்நிலையில் ஆர்சிபி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 27ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் லக்னோவில் உள்ள எகனா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக விராட் கோலி, ஆர்சிபி அணியுடன் தற்போது லக்னோவில் உள்ளார். இந்த சூழ்நிலையில்தான் அவர், தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ராமர் கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top