தோனி பாணியில்… விராட் கோலி !

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களில் 3 முக்கியமான வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றார். கடந்த வாரம் ரோஹித் சர்மா விடை பெற்றார். இந்த வரிசையில் தற்போது விராட் கோலியும் இணைந்துள்ளார்.

கங்குலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் தோனி பெரும் பங்கு வகித்தார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி, சமூக வலைளத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தற்போது இதே பாணியை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் கடைபிடித்துள்ளனர்.

விராட் கோலி 14 ஆண்டுகால தனது புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். 30 சதங்கள், 31 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top