ஃபிபா தலைவருடன் ஜெய்ஷா சந்திப்பு

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தின் 144-வது அமர்வு கிரீஸ் நாடின் கோஸ்டா நவரினோ நகரில் கடந்த மார்ச் 19 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த அமர்வின் போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் ஷாவை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிபா) தலைவார் கியானி இன்பான்டினோ சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக கியானி இன்பான்டினோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஐசிசி தலைவரும், அருமையான நிர்வாகியுமான ஜெய் ஷாவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவுக்கு சென்றிருந்தேன்.

அங்குள்ள மக்கள் கிரிக்கெட்டின் மீது வைத்திருக்கும் நம்பமுடியாத ஆர்வத்தையும், விளையாட்டை மேலும் வளர்க்க ஜெய் ஷா செய்த சிறந்த பணிகளையும் கண்டேன். உங்கள் பணி மேலும சிறக்க வாழ்த்துகிறேன். கிரிக்கெட்டை இன்னும் உலகளாவியதாக மாற்ற ஒன்றிணைந்து பணியாற்றவும் ஒத்துழைக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top