Wayne Madsen_2

முதன்முறையாக அறிமுகமாகும் இத்தாலி

ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இரு முறை சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துடன் இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் இத்தாலி அணி குறித்து ஒரு பார்வை…

டி 20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக களமிறங்குகிறது இத்தாலி அணி. இதன் மூலம் அந்த அணி ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 25-வது அணி என்ற பெருமையை பெற உள்ளது. இத்தாலி அணி 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான ஐரோப்பிய பிராந்திய இறுதிப் போட்டியில் 2-வது இடம் பிடித்திருந்தது.

இந்தத் தொடரில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இத்தாலி அணி டி 20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணியின் மிதவேகப்பந்து வீச்சாளரான ஹாரி மனென்டி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரது சிறப்பான செயல் திறனால் இத்தாலி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

கேப்டன் வெய்ன் மேட்சன், 42 வயதைக் கடந்தாலும், அவரது சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அந்த அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெய்ன் மேட்சன் 61 ரன்கள் சேர்த்து கவனம் ஈர்த்திருந்தார். முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல் ரண்டரான ஜெ.ஜெ.ஸ்மட்ஸ் அணியின் நடுவரிசையில் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். சுழற்பந்துவீச்சிலும் அவர், கொடுக்கக்கூடியவர்.

அணி விவரம்:

வெய்ன் மேட்சன் (கேப்டன்), மார்கஸ் காம்போபியானோ, ஜியான் பியோரோ மீடே, ஜைன் அலி, அலி ஹசன், கிரிஷன் ஜார்ஜ் கலுகமகே, ஹாரி மானென்டி, அந்தோனி மோஸ்கா, ஜஸ்டின் மோஸ்கா, சையத் நக்வி, பெஞ்சமின் மானென்டி, ஜஸ்பிரீத் சிங், ஜேஜே ஸ்மட்ஸ், கிராண்ட் ஸ்டூவர்ட், தாமஸ் டிராக்கா.

மோதல் விவரம்:

Italy Schdule

5 thoughts on “முதன்முறையாக அறிமுகமாகும் இத்தாலி”

  1. I’ve been using this site for a few weeks now and the experience is pretty smooth. The payouts are fast and the interface is very user-friendly. Highly recommend we88global to anyone looking for a reliable spot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top