எஸ்ஆர்எம் கல்லூரியில் சர்வதேச செஸ் போட்டி

சென்னை

சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் சர்வதேச ஓபன் ஃபிடே ரேட்டிங் செஸ் தொடர் இன்று தொடங்குகிறது.

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச ஓபன் ஃபிடே ரேட்டிங் செஸ் தொடர் இன்று (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா முழுவதிலும் இருந்து 450 பேர் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.5 லட்சம் ஆகும். மேலும் 80 பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top