துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நீரு தண்டா

ஷிம்கென்ட்

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டிராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். கத்தாரின் பாஸில் ரே 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் ஆஷிமா அஹ்லாவத் 29 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான டிராப் அணிகள் பிரிவில் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத், பிரீத்தி ரஜக் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 319 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான டிராப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவுனீஷ் மெந்திராட்டா 45 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிர் ஜூனியருக்​கான 25 மீட்​டர் பிஸ்​டல் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் பாயல் காத்ரி 36 புள்​ளி​களை குவித்து தங்​கப் பதக்​க​மும், நம்யா கபூர் 30 புள்​ளி​களு​டன் வெள்​ளிப் பதக்​க​மும், தேஜஸ்​வினி 27 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் வென்​றனர். இந்த 3 பேரும் அணி​கள் பிரி​வில் 1,700 புள்​ளி​களை குவித்து வெள்​ளிப் பதக்​கம்​ வென்​றனர்​.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top