கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல்

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமா கவுதம் காம்பீருக்கு, 2 முறை மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் நான் உன்னை கொல்லப்போகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்ற அதே நாளில், இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காம்பீர் ரஜிந்தர் நகர் காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top