யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வேயுடன் மோதியது. புலவாயோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. துணை கேப்டனான விஹான் மல்கோத்ரா 107 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசி அசத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61ரன்களும் சேர்த்தனர்.
353 ரன்கள் இலக்குடன் பேட் செய் ஜிம்பாப்வே அணி 37.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் உத்தவ் மோகன், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் குரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது.


Finally found a place that doesn’t lag during big wins. Great variety of games and the customer support is top notch. Check out krevos168 if you want a fair gaming experience.
Finally found a platform that actually pays out on time. The variety of games is impressive and the interface is super intuitive. Check out phcg777 if you want some real action.
Really impressed with the variety of games available here. It is super easy to navigate and the interface feels very smooth on mobile. Highly recommend vn778win to everyone.