U 19 SF

யு-19 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா

யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

யு-19 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் சிக்ஸ் 6 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று ஜிம்பாப்வேயின் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 98 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்தார். கனிஷ்க் சவுகான் 35 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 30, அம்பிரிஷ் 29, விஹான் மல்ஹோத்ரா 21, கிலான் படேல் 21 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அப்துல் சுபன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்குச் சுருண்டது.

இதனால், இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top