UTT_Auction

யுடிடி சீசன்: சென்னை லயன்ஸ் அணியில் சீனாவின் ஃபேன் ஷிகி

சத்தியன் ஞானசேகரன் 6-வது முறையாக டெல்லி அணிக்கு திரும்பி சாதனை

மும்பை

இந்தியன் டேபிள் டென்னிஸ் சங்கத்தின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ், விடா டானி ஆகியோரால் நடத்தப்படும் இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) 6-வது சீசன் போட்டி வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகமதாபாத்தில் உள்ள EKA அரினாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்தத் தொடருக்கான வீரர், வீராங்கனைகளின் ஏலம் மும்பையில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்து.

இதில் சீசன் 3 சாம்பியனான சென்னை லயன்ஸ் அணி சீன வீராங்கனையான ஃபேன் ஷிகியை ரூ.19.7 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) 6-வது சீசனில் அதிக மதிப்புள்ள வீராங்கனையாக ஃபேன் ஷிகி மாறினார். இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான தியா சித்தலேவை தபாங் டெல்லி டிடிசி ரைட் டூ மேட்ச் கார்டை பயன்படுத்தி ரூ.14.1 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் இந்தியர்களில் அதிக மதிப்புள்ள வீராங்கனையாக தியா சித்தலே மாறினார். அவரை ஏலத்தில் எடுப்பதற்கு கடுமையான போட்டி நிலவியது.

சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ள கோவா சாலஞ்சர்ஸ் அணி, இரு முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன் ஹர்மீத் தேசாயை ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் ரூ.14 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இது அவரது அடிப்படை விலையைவிட இரு மடங்கு அதிகமாகும். சீசன் 2 வெற்றியாளரான தபாங் டெல்லி டிடிசி சத்தியன் ஞானசேகரன் ரூ.10 லட்சத்துக்கு வாங்கியது. இதன் மூலம் 6-வது முறையாக ஒரே அணிக்காக களமிறங்கும் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சத்தியன் ஞானசேகரன்.

ஸ்ரீஜா அகுலா, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். அவரை அந்த அணி ரைட் டூ மேட்ச் கார்டை பயன்படுத்தி ரூ.11 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அதேவேளையில் அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் வெற்றிகரமாக மணிகா பத்ராவை ரூ.12 லட்சத்துக்கு வாங்கியது. இளம் வீரர்களான அங்குர் பட்டாசார்ஜி, பிரயாஷ் ஜெயின் ஆகியோரை முறையே கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் மற்றும் சென்னை லயன்ஸ் அணி ரூ.11.4 லட்சத்துக்கும், ரூ.11.6 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தன.

கோவா அணியில் ஹர்மீத், கிரித்விகா சின்ஹா ராய், ஒலிம்பிக் வீராங்கனைகளான டியாகோ அப்போலோனியா, ஜெங் ஜியான் மற்றும் இளம் வீரர்களான ரோனித் பஞ்சா, சயாலி வானி ஆகியோர் இணைந்துள்ளனர். சத்தியன், தியா ஆகியோரைத் தவிர, இளம் திறமைசாலிகளான சுஹானா சைனி மற்றும் ஒலிம்பியன்கள் கியூக் ஐசக் மற்றும் மரியா சியாவோ ஆகியோரை டெல்லி அணி சேர்த்துள்ளது.

அறிமுக அணியான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அட்ரியானா டயஸை ரூ.19.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளதுடன்  அனுபவம் வாய்ந்த நைஜீரிய  வீரர் குவாட்ரி அருணாவுடன் ஜோடி சேர்த்துள்ளது. குவாட்ரி அருணா அவரது அடிப்படை விலையான ரூ.11 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார். 19 வயதான அங்கூர் பட்டாசார்ஜியையும் கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. சென்னை லயன்ஸ் முன்னாள் யு -17 உலக நம்பர் 1 வீரரான பயாஸ் ஜெயின் மற்றும் கஜகஸ்தானின் கிரில் ஜெராசிமென்கோ ஆகியோருடன் சீனாவின் ஃபேன் ஷிகியை ஜோடி சேர்த்துள்ளது.

பிபிஜி புனே ஜாகுவார்ஸ் ஸ்பெயின் நட்சத்திரம் அல்வாரோ ராபிள்ஸை ரூ.18.1 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட 3-வது வீரர் இவராவார். நாசிக்கை தளமாகக் கொண்ட வளர்ந்து வரும் வீராங்கனையான தனிஷா கோடெச்சாவைத் தக்க வைத்துக் கொள்ள புனே தனது ரைட் டூ மேட்ச் கார்டை பயன்படுத்தியது.

யு மும்பா டிடி சிறந்த உள்நாட்டு திறமைகளில் முதலீடு செய்தது, யாஷஸ்வினி கோர்படேவை ரூ.8.6 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.   அனுபவம் வாய்ந்த சர்வதேச நட்சத்திரங்களான பெர்னாடெட் சோக்ஸ் மற்றும் லிலியன் பார்டெட் ஆகியோருடன் பிபி அபிநந்தையும் ஏலம் எடுத்தது.

அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் மணிகாவுடன் நட்சத்திர சக்தியைச் சேர்த்தது, அவரை WTT ஸ்டார் போட்டியாளர் சென்னை 2025 காலிறுதியாளர் ஸ்னேஹித் சுரவஜ்ஜூலாவுடன் இணைத்தது. அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்களான ரிக்கார்டோ வால்தர் மற்றும் ஜியார்ஜியா பிக்கோலின் ஆகியோரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் தங்கள் ரைட் டூ மேட்ச் கார்டைப் பயன்படுத்தி WTT போட்டியாளரான லாகோஸ் 2024 வெற்றியாளர் ஸ்ரீஜாவைத் தக்க வைத்துக் கொண்டது, அதே நேரத்தில் அமெரிக்காவின் கனக் ஜா மற்றும் நெதர்லாந்தின் பிரிட் ஈர்லேண்ட் ஆகியோரை தங்கள் வெளிநாட்டு வீரர்களாக ஒப்பந்தம் செய்தது. ஜீத் சந்திரா, பிரீதா வர்டிகர் மற்றும் யஷான்ஷ் மாலிக் ஆகியோர் ஆறு பேர் கொண்ட அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

*இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 அணிகள்*

*அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ்:* மணிகா பத்ரா – ரூ.12 லட்சம் டோக்கன்கள், ரிக்கார்டோ வால்தர் – ரூ.11.6 லட்சம் டோக்கன்கள், ஸ்னேஹித் சுரவஜ்ஜுலா – ரூ.9.9 லட்சம் டோக்கன்கள், ஜியார்ஜியா பிக்கோலின் – ரூ.7 லட்சம் டோக்கன்கள், திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா – ரூ.4 லட்சம் டோக்கன்கள், யாஷினி சிவசங்கர் – ரூ.2 லட்சம் டோக்கன்கள்.

*சென்னை லயன்ஸ்:* ஃபேன் ஷிகி (சீனா) – ரூ.19.7 லட்சம் டோக்கன்கள், கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்) – ரூ.12.4 லட்சம் டோக்கன்கள், பயாஸ் ஜெயின் – ரூ.11.6 லட்சம் டோக்கன்கள், சுதான்ஷு குரோவர் – ரூ.2 லட்சம் டோக்கன்கள், ஜெனிபர் வர்கீஸ் – ரூ.2 லட்சம் டோக்கன்கள், நிகாத் பானு – ரூ.2 லட்சம் டோக்கன்கள்.

*தபாங் டெல்லி டிடிசி:* தியா சித்தலே – ரூ.14.1 லட்சம் டோக்கன்கள் (ஆர்டிஎம்), மரியா சியாவோ (ஸ்பெயின்) – ரூ.12.6 லட்சம் டோக்கன்கள், சத்தியன் ஞானசேகரன் – ரூ.10 லட்சம் டோக்கன்கள், கியூக் ஐசாக் (சிங்கப்பூர்) – ரூ.7 லட்சம் டோக்கன்கள், சுஹானா சைனி – ரூ.2.3 லட்சம் டோக்கன்கள், சவுரவ் சாஹா – ரூ.2.1 லட்சம் டோக்கன்கள்.

*கோவா சேலஞ்சர்ஸ்:* ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) – ரூ.17.2 லட்சம் டோக்கன்கள், ஹர்மீத் தேசாய் – ரூ.14 லட்சம் டோக்கன்கள் (ஆர்டிஎம்), டியாகோ அபோலோனியா (போர்ச்சுகல்) – ரூ.7 லட்சம் டோக்கன்கள், ரோனித் பஞ்சா – ரூ.4 லட்சம் டோக்கன்கள், கிருத்விகா சின்ஹா ராய் – ரூ.4 லட்சம் டோக்கன்கள், சயாலி வானி – ரூ.3.7 லட்சம் டோக்கன்கள்.

*ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்:* பிரிட் ஈர்லேண்ட் (நெதர்லாந்து) – ரூ.11.1 லட்சம் டோக்கன்கள், கனக் ஜா (அமெரிக்கா) – ரூ.11 லட்சம் டோக்கன்கள், ஸ்ரீஜா அகுலா – ரூ.11 லட்சம் டோக்கன்கள் (ஆர்டிஎம்), ஜீத் சந்திரா – ரூ.5.7 லட்சம் டோக்கன்கள், பிரீதா வர்டிகர் – ரூ.2.4 லட்சம் டோக்கன்கள், யஷான்ஷ் மாலிக் – ரூ.2 லட்சம் டோக்கன்கள்.

*கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ்:* அட்ரியானா டயஸ் (புவேர்ட்டோ ரிக்கோ) – ரூ.19.3 லட்சம் டோக்கன்கள், அருணா குவாட்ரி (நைஜீரியா) – ரூ.11 லட்சம் டோக்கன்கள், அங்கூர் பட்டாச்சார்ஜி – ரூ.11.4 லட்சம் டோக்கன்கள் (ஆர்டிஎம்), செலினா செல்வகுமார் – ரூ.3.9 லட்சம் டோக்கன்கள், அனன்யா சண்டே – ரூ.2 லட்சம் டோக்கன்கள், தீபித் பாட்டீல் – ரூ.2 லட்சம் டோக்கன்கள்.

*யு மும்பா டிடி:* பெர்னாடெட் சோக்ஸ் (ருமேனியா) – ரூ.15.3 லட்சம் டோக்கன்கள், லிலியன் பார்டெட் (பிரான்ஸ்) – ரூ.11.1 லட்சம் டோக்கன்கள், யாஷஸ்வினி கோர்பேட் – ரூ.8.6 லட்சம் டோக்கன்கள், ஸ்வஸ்திகா கோஷ் – ரூ.7 லட்சம் டோக்கன்கள், ஆகாஷ் பால் – ரூ.4 லட்சம் டோக்கன்கள் (ஆர்டிஎம்), அபிநந்த் பிபி – ரூ.2.1 லட்சம் டோக்கன்கள்.

*பிபிஜி புனே ஜாகுவார்ஸ்:* அல்வாரோ ரோபிள்ஸ் (ஸ்பெயின்) – ரூ.18.1 லட்சம் டோக்கன்கள், தினா மெஷ்ரெஃப் (எகிப்து) – ரூ.11 லட்சம் டோக்கன்கள், தனிஷா கோடெச்சா – ரூ.4 லட்சம் டோக்கன்கள் (RTM), அனிர்பன் கோஷ் – ரூ.4 லட்சம் டோக்கன்கள், ரீத் ரிஷ்யா – ரூ.4 லட்சம் டோக்கன்கள், முடித் டானி – ரூ.2.2 லட்சம் டோக்கன்கள்.

*UTT சீசன் 6 ஏலம் – அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர்கள்*

1. ஃபேன் ஷிகி – 19.7 லட்சம் டோக்கன்கள் (சென்னை லயன்ஸ்)
2. அட்ரியானா டயஸ் – 19.3 லட்சம் டோக்கன்கள் (கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ்)
3. அல்வாரோ ரோபில்ஸ் – 18.1 லட்சம் டோக்கன்கள் (பிபிஜி புனே ஜாகுவார்ஸ்)
4. ஜெங் ஜியான் – 17.2 லட்சம் டோக்கன்கள் (கோவா சேலஞ்சர்ஸ் டிடிசி)
5. பெர்னாடெட் சோக்ஸ் – 15.3 லட்சம் டோக்கன்கள் (யு மும்பா டிடி)
6. தியா சித்தாலே – 14.1 லட்சம் டோக்கன்கள் (தபாங் டெல்லி டிடிசி)
7. ஹர்மீத் தேசாய் – 14 லட்சம் டோக்கன்கள் (கோவா சேலஞ்சர்ஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top