நியூசி வீரரை இடித்து தள்ளிய பாக். ஆல்ரவுண்டருக்கு ஐசிசி அபராதம்

அடுத்த 24 மாதம் ரொம்ப முக்கியம்

சாம்பியன் டிராபியில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டி20 போட்டிகளில் ஆடிவருகிறது.

மார்ச் 16ல் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் குஷ்தில் ஷா அதை மிட் ஆன் நோக்கி அடித்து விட்டு, அவரும் கேப்டன் சல்மான் ஆகாவும் ரன் எடுக்க ஓடினர். அப்போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் சாக் போல்க்ஸ் மீது அவர் மோதினார்.

khushdil shah

இதில் குஷ்தில் ஷாவின் இடது தோள்பட்டை போல்க்சை தாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக போல்க்ஸ் காயம் அடையவில்லை. இந்த மோதல் குறித்து ஐசிசி விசாரணை நடத்தி பாக் ஆல் ரவுண்டர் குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீத அபராதம் மற்றும் 3 டீமெரிட் புள்ளி வழங்கியது.

இதனால் குஷ்தில் ஷா அடுத்த 24 மாதங்களில் மேலும் ஒரு டிமெரிட் புள்ளி பெற்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவார். அடுத்த 24 மாதங்களில் ஒரு புள்ளியை அவர் பெற்றால் குஷ்தில் ஷா ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டி அல்லது இரண்டு டி20 போட்டிகளில் எது முதலில் வருகிறதோ அந்த ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top