Sai Sudharsan 3

பிளே ஆப் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ்

சுதர்சன் – கில் அமர்க்களம் * காத்திருப்பில் கேப்பிடல்ஸ் * ராகுல் சதம் வீண்

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரின் 60வது லீக் ஆட்டத்தில், கேப்டன் கில் – சாய் சுதர்சன் ஜோடியின் அதிரடியால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.  

Sai Sudharsan 3

அருண் ஜெட்லி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச… டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. டு பிளெஸ்ஸி 5, அபிஷேக் போரெல் 30, கேப்டன் அக்சர் படேல் 25 ரன் எடுத்து அவுட்டாகினர்.

அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 112 ரன் (65 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்னுடன் (10 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், சாய் சுதர்சன் – கேப்டன் கில் தொடக்க ஜோடியின் அமர்க்களமான ஆட்டத்தால் 19 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 205 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

GT qualified

சாய் சுதர்சன் 108 ரன் (61 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), கில் 93 ரன்னுடன் (53 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியதுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது.

12 இன்னிங்சில் 617 ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை மீண்டும் வசப்படுத்திய சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், எஞ்சியுள்ள ஒரு இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top