இத்தாலி ஓபனில் ஜாஸ்மின் பவுலினி சாம்பியன்

ரோம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் மோதினர். இதில் பவுலினி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.


இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் உள்நாட்டு வீராங்கனை ஒருவர் 40 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன்னர் 1985-ம் ஆண்டு நடைபெற்ற இத்தாலி ஓபனில், ரபேல்லா ரெக்கி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

Jasmine Paolini doubles
இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, சாரா எரானி ஜோடி.

இரட்டையர் பிரிவில் ஜாஸ்மின் பவுலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவர், சகநாட்டைச் சேர்ந்த சாரா எரானியுடன் இணைந்து விளையாடினார். இந்த ஜோடி இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா ஜோடியை 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. கடந்த ஆண்டும் ஜாஸ்மின் பவுலினி, சாரா எரானி ஜோடி கோப்பையை வென்றிருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top