Butler_2

டி20 தொடரை வென்று இங்கிலாந்து அணி

இலங்கை – இங்​கிலாந்து அணி​கள் இடையிலான 2-வது டி20 கிரிக்​கெட் போட்டி பல்​லேகலே மைதானத்​தில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்​களில் 5 விக்கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் குவித்​தது. பவன் ரத்னாயகே 40, கமில் மிஷாரா 36, பதும் நிசங்கா 34, குஷால் மெண்​டிஸ் 32, சரித் அசலங்கா 28 ரன்​கள் சேர்த்​தனர். இங்கிலாந்து அணி தரப்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர் 2 விக்கெட்களை கைப்​பற்​றி​னார்.

இதையடுத்து இங்​கிலாந்து அணி பேட் செய்த நிலை​யில் மழை குறுக்​கீடு காரண​மாக 17 ஓவர்​களில் 168 ரன்​கள் சேர்க்க வேண்​டும் என இலக்கு மாற்றி அமைக்​கப்​பட்​டது. இதை நோக்கி விளை​யாடிய இங்​கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. டாம் பேன்​டன் 54, ஜாஸ் பட்​லர் 39, கேப்டன் ஹாரி புரூக் 36, சேம் கரண் 20 ரன்​கள் விளாசினர்.

6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரை 2-0 என தன்​வசப்​படுத்​தி​யது. முதல் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top