சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் பரிசு ரூ.1 கோடி

சென்னை

3-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி வரும் ஆகஸ்ட் 6 முதல் 15-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீரர்களின் எண்ணிக்கை இரு பிரிவிலும் கூட்டாக 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரு சீசன்களிலும் ஒவ்வொரு பிரிவிலும் தலா 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இனிமேல் ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 வீரர்கள் கலந்துகொள்வார்கள்.

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் இந்த தொடரை MGD1 நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஃபின்டெக் நிறுவனமான குவாண்ட்பாக்ஸ் ரிசர்ச் மெயின் ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதன் மூலம் போட்டிக்கு குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top