184 விக்கெட்கள் வீழ்த்தி புவனேஷ்வர் குமார் சாதனை !

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 221 ரன்கள் குவித்தது. விராட் 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 67 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 64 ரன்களும், ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் விளாசினர். தேவ்தத் படிக்கல் 22 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

222 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக போராடிய நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 29 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி களத்தில் இருக்கும் வரை மும்பை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. 34 பந்துகளில் 89 ரன்கள் விளாசி மிரட்டிய இந்த ஜோடியை புவனேஷ்வர் குமார் காலி செய்திருந்தார்.

இது ஐபிஎல் தொடர்களில் புவனேஷ்வர் குமார் கைப்பற்றிய 184வது விக்கெட்டாகும். இதன் மூலம்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் புவனேஷ்வர் குமார். இதற்கு முன்னர் இந்த பட்டியலில் பிராவோ (183 விக்கெட்கள்) முதல் இடத்தில் இருந்தார். அவரது சாதனையை புவனேஷ்வர் குமார் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகங்கள்

புவனேஷ்வர் குமார் – 184

டுவைன் பிராவோ – 183

லசித் மலிங்கா – 170

ஜஸ்பிரீத் பும்ரா – 165

உமேஷ் யாதவ் – 144

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top