பிசிசிஐ ஒப்பந்தம் ‘ஏ’ கிரேடில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா

மும்பை: மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் நட்சத்திர வீராங்கனைகளான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் ‘ஏ’ கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Smriti Mandhana 2

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடும் வீராங்கனைகளுக்கு, ஆட்டத்துக்கான ஊதியம் தவிர, ஆண்டு ஊதியமும் வழங்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கிறது. அந்த வகையில் 2025-26-ம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் நட்சத்திர வீராங்கனைகளான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் ‘ஏ’ கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

harman2

‘பி’ கிரேடில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா தாக்குர், ரிச்சா கோஷ், ஷஃபாலி வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ‘சி’ கிரேடில் யாஸ்டிகா பாட்டியா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டில், டிடாஸ் சாது, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கௌர், உமா சேத்ரி, ஸ்நேஹ் ராணா, பூஜா வஸ்த்ராகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏ கிரேடு வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சமும், பி கிரேடு வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும், சி கிரேடு வீராங்கனைகளுக்கு ரூ. 10 லட்சமும் கிடைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top