சாம்பியன் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப்பரிசு அறிவித்த பிசிசிஐ

விராட் கோஹ்லி, ரோகித்திற்கு தலா ரூ.3 கோடி பரிசு

துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசை பிசிசிஐஅறிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்தது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மார்ச் 9ம் தேதி துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் மோதின. இதில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மூன்றாம் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றிக்கோப்பையுடன், இந்திய அணிக்கு ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட்டது.

Trophy

தற்போது அதை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக ரூ.58 கோடி பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த பரிசு அணியின் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்கள், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி உள்ளிட்ட ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.3 கோடி வழங்கப்படும். தலைமைப் பயிற்சியாளருக்கு கவுதம் கம்பீருக்கு ரூ. 3 கோடி வழங்கப்படும்.

உதவி பயிற்சியாளர்கள் ரியான் டென் டோஸ்கேட், அபிஷேக் நாயர், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும். உதவி ஊழியர்களுக்கு தலா 50 லட்சமும், அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு தலா 25 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top