காதலியை மணந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர் மகளிர் கிரிக்கெட்டில் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருகிறார். தனது பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே தனி ஒருவராக மாற்றும் திறனைக் கொண்டுள்ள அவர், களத்தில் நிற்கும் ஒரு சக்தியாக மட்டுமல்லாமல், போட்டியை வென்றெடுக்கும் பந்துவீச்சாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்.

Ashleigh Gardner

ஆஷ்லே கார்ட்னர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில், அவர் 7 போட்டிகளில் விளையாடி, 33 சராசரியுடன் 325 ரன்கள் எடுத்துள்ளார். அதேவேளையில் 77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 29 சராசரியுடன் 1,270 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில், அவர் 95 போட்டிகளில் விளையாடி, 25 சராசரியுடன் 1,411 ரன்கள் எடுத்துள்ளார்.

Ashleigh Gardner 5

கடந்த 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான அவர், ஒரு முக்கிய வீராங்கனையாக தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஏராளமான ஐசிசி சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளது. இதில் ஆஷ்லே கார்ட்னர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மிடில் ஆர்டரில் தனது சக்திவாய்ந்த பேட்டிங் மற்றும் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சு அவரது பெரிய பலம்.

ஆஷ்லே கார்ட் 2021ம் ஆண்டு முதல் மோனிகா ரைட் என்பவருடன் பழகி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆஷ்லே கார்ட்னர் காதல் வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்க முனைந்தாலும், அவ்வப்போது மோனிகாவுடனான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார். இதைத் தொடர்ந்த கடந்த ஆண்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்களது நிச்சயதார்த்தை பகிரங்கமாக அறிவித்தனர்.

Ashleigh Gardner 6

இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்களது திருமணம் இவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆஷ்லே கார்ட்னர் மகளிர் ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணியின் கேப்டனாக இந்த சீசனில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top