ZIM_1

ஆஸ்திரேலியா ஷாக் தோல்வி

ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது.அ

அதிகபட்சமாக பிரையன் பென்னட் 56 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாசினார். ரியான் பர்ல் 30 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களும்,தடிவனாஷே மருமணி பவர்பிளேவில் 21 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், கேப்டன் சிகந்தர் ராசா 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தனர்.

170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 29 ரன்களை சேப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஜோஷ் இங்லிஷ் 4, கேமரூன் கிரீன் 0, டிம் டேவிட் 0, கேப்டன் டிராவிஸ் ஹெட் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கிளென் மேக்ஸ்வெல் 31 ரன்கள் எடுத்த நிலையில் ரியான் பர்ல் பந்தில் போல்டானார். இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது. மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்களில் மசகட்சா பந்திலும், பென் டுவார்ஷுயிஸ் 6 ரன்களில் இவான்ஸ் பந்திலும் நடையை கட்டினர்.

18 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. சீரான இடைவேளையில் விக்கெட்கள் சரிந்த போதிலும் மேட் ரென்ஷா நம்பிக்கையுடன் விளையாடி தனது முதல் அரை சதத்தை கடந்தார். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவையாக இருந்தது.

19-வது ஓவரை வீசிய முசராபானி மேட் ரென்ஷாவை ஆட்டமிழக்கச் செய்தார். மேட் ரென்ஷா 44 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் ஆடம் ஸாம்பாவும் (2) நடையை கட்டினார். இது முசராபானிக்கு சர்வதேச டி 20 அரங்கில் 100-வது விக்கெட்டாக அமைந்தது.

கைவசம் ஒரு விக்​கெட் மட்​டுமே இருந்த நிலை​யில் ஆஸ்திரேலிய அணி​யின் வெற்​றிக்கு பிராடு இவான்ஸ் வீசிய கடைசி ஓவரில் 29 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. முதல் பந்​தில் நேதன் எல்​லிஸ் பவுண்​டரி அடித்​தார். அடுத்த பந்​தில் ஒரு ரன் சேர்க்​கப்பட 3-வது பந்​தில் மேத்யூ குனேமன் (0) ரன் அவுட் ஆனார்.

முடி​வில் ஆஸ்​திரேலிய அணி 19.3 ஓவர்​களில் 146 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அந்த அணி தனது கடைசி 6 விக்​கெட்​களை 40 ரன்​களுக்கு தாரை​வார்த்​தது. ஜிம்பாப்வே அணி தரப்​பில் பிளெசிங் முச​ரா​பானி 4 ஓவர்களை வீசி 17 ரன்​களை வழங்கி 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பிராடு இவான்ஸ் 3.3 ஓவர்​களை வீசி 23 ரன்களை விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை கைப்பற்றினார்.

23 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஜிம்​பாப்வே அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் ஓமன் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றிருந்​தது. இந்த இரு வெற்​றிகளின் மூலம் ஜிம்​பாப்வே அணி 4 புள்​ளி​களு​டன் 2-வது இடத்துக்கு முன்​னேறியது.

டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் ஆஸ்​திரேலி​யாவை ஜிம்​பாப்வே அணி வீழ்த்​து​வது இது 2-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் கடந்த 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்​திரேலி​யாவை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்​திரேலிய அணிக்கு இது முதல் தோல்​வி​யாக அமைந்​தது.

5 thoughts on “ஆஸ்திரேலியா ஷாக் தோல்வி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top