‘You tube’ விவகாரத்தில் அஸ்வின் அந்தர்பல்டி

சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின்  யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் கிரிக்கெட் தொடர்பான சுவாரஷ்யமான விஷயங்களை கூறுவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் உள்ளிட்டவை குறித்தும் வீரர்கள், அணிகளின் பலம், பலவீனங்கள் குறித்து கூறுவது உண்டு. இந்நிலையில் அவரது சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கேற்ற விருந்தினர்கள் சிலர், சிஎஸ்கே அணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் நிலையில், அவர் நடத்தும் youtube சேனலில் சிஎஸ்கே அணி தொடர்பாகவே தாறுமாறான விமர்சனங்கள் முன் வைத்தது பல்வேறு தரப்பினரிடைய சர்ச்சையை உருவாக்கியது.

இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர், அஸ்வின் சேனல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பின் தொடர்வதும் இல்லை என்று கூறினார்.  இந்நிலையில் அஸ்வின் தனது சேனலில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், இனிமேல் சிஎஸ்கே அணி தொடர்பான போட்டிக்கு Preview, review  இடம் பெறாது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top