விராட் கோலியுடன் பிக்கிபால் விளையாடிய அனுஷ்கா சர்மா

பெங்களூரு

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் ஆர்சிபி அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் பிக்கில்பால் விளையாடி நேரத்தை செலவிட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை ஆர்சிபி அணி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.

இதில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிக்கில்பால் விளையாடும் போட்டோவும் உள்ளது. இதேபோன்று ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் தனது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையுமான தீபிகா பல்லிகலுடன் பிக்கிபால் விளையாடும் போட்டோக்கவும் பகிரப்பட்டுள்ளது.

DK Deepika

இது தற்போது வைரலாகி உள்ளது. ஆர்பிசி அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதுகிறது. பெங்களூருவில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் மழை காரணமாக தற்போது லக்னோவில் நடத்தப்பட உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top