வெள்ளி வென்றார் ஆலிஷா நாயக்

சென்னை

ஆஸ்திரிய ஓபன் இன்டர்நேஷனல் பாட்மிண்டன் தொடர் ஆஸ்திரியாவின் ஹட்டன்ப்ரென்னெர்கஸ்ஸே நகரில் நடைபெற்றது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆலிஷா நாயக், டென்மார்க்கின் அமாலி ஷூல்ஸுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆலிஷா நாயக் 21-11, 15-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஆலிஷா நாயக் சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பிபிஏ முதல் ஆண்டு படித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top