பிரெஞ்சு ஓபனில் அல்கராஸ் சாம்பியன்

பாரிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களையும் ஜன்னிக் சின்னர் 6-4, 7-6(7-4) என்ற செட் கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.

எனினும் அடுத்த 3 செட்களையும் கடுமையாக போராடி 7-6 (3), 7-6 (10-2) என்ற கணக்கில் கைப்பற்றினார் கார்லோஸ் அல்கராஸ். முடிவில் 5 மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டும் அவர், பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருந்தார்.

ஒட்டுமொத்தமாக அல்கராஸ் கைப்பற்றியுள்ள 5-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதேவேளையில் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார் ஜன்னிக் சின்னர். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஓபன் எராவில் மிக நீண்ட நேரம் நடைபெற்ற இறுதிப் போட்டியாக கார்லோஸ் அல்கராஸ் – ஜன்னிக் சின்னர் மோதிய ஆட்டம் அமைந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top