Ireland

அசத்தும் முனைப்பில் அயர்லாந்து

ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் முனனாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் ஓமன், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அயர்லாந்து அணி குறித்த ஒரு பார்வை…

2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரை தவிர மற்ற அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் அயர்லாந்து அணி பங்கேற்றுள்ளது. இம்முறை அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் முனைப்பு காட்டக்கூடும். அயர்லாந்து அணி கடைசியாக 2022-ம் ஆண்டு தொடரில் லீக் சுற்றை கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியை சூப்பர் 6 சுற்றில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தது.

வழக்கம் போன்று பால் ஸ்டிர்லிங்கே கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த வீரர்களாக சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் டாக்ரேல், விக்கெட் கீப்பர் லார்கன் டக்கர் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜோஷ் லிட்டில் பலம் சேர்க்கக்கூடும். சுழலில் 23 வயதான மேத்யூ ஹம்ப்ரேஸ் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

அணி விவரம்:

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ராஸ் அடேர், பென் காலிட்ஸ், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரீஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், டிம் டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

மோதல் விவரம்:

Ireland schdule

2 thoughts on “அசத்தும் முனைப்பில் அயர்லாந்து”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top