ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – பரோடா அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.
முதலில் பேட் செய்த பரோடா முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அதித் சேத் 109 ரன்கள் எடுத்தாா். தமிழ்நாடு அணி தரப்பில் ஜெகநாதன் ஹேமசுதேசன் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 449 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 36 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பரோடா அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.
லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், ‘ஏ’-வில் தமிழ்நாடு 6-ஆம் இடம் பிடித்தது. முதல் இரு இடங்களைப் பெற்ற ஜாா்க்கண்ட், ஆந்திரம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

