ஆசிய தடகளத்தில் தங்கம் வென்றார் குல்வீர் சிங்

 குமி

 தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று (மே 27) தொடங்கியது. இதில் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார்.

 26 வயதான அவர், பந்தய தூரத்தை  28:38.63 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜப்பானின் மெபுகி சுஸுகி (28:43.84) வெள்ளிப் பதக்கமும், பக்ரைனின் ஆல்பர்ட் கிபிச்சி ராப் (28:46.82) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

முன்னதாக இந்தியாவின் பதக்க வேட்டையை தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் தொடங்கி வைத்தார். அவர், ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். செர்வின் பந்தய தூரத்தை 1:21:13.60 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.

சீனாவின் வாங் ஜாவோஜாவோ (1:20:36.90) தங்கமும், ஜப்பானின் கென்டோ யோஷிகாவா (1:20:44.90) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top