துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் தேஜஸ்வானி

சுஹ்ல்

 ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தேஜஸ்வானி தங்கப் பதக்கம் வென்றார்.

 ஜெர்மனியின் சுஹ்ல் நகரில் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வானி 31 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

 பெலாரஸின் அலினா நெஸ்ட்சியாரோவிச் 29 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஹங்கேரியின் மிரியம் ஜாகோ 23 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

 இந்தத் தொடரில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் 11 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் உள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top