போர் பதற்றத்தால் ஐபிஎல் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம் !

அகமதாபாத்

போர் பதற்றம் எதிரொலியால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் மேலும் தீவிரமடைந்திருக்கிறது.

இதனால், இந்தியாவில் வடமாநிலங்களில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இமாச்சல் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ள விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளது. இதனை குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் அனில் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top