ஐபிஎல் வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!

பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் வீரர்களை டெல்லிக்கு அழைத்துவர சிறப்பு வந்தே பாரத் ரயிலை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று தரம்சாலாவில் ஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான நடைபெற்று கொண்டிருந்தது. பஞ்சாப் அணி முதலில் பேட் செய்த நிலையில் 10.1 ஓவரில் ஆட்டம் திடீரென நிறுத்தப்பட்டது.

எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக தரம்சாலா மைதானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து பஞ்சாப், டெல்லி அணி வீரர்களை பாதுகாப்பாக ஹோட்டலுக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் தரம்சாலா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top