ராஜஸ்தான் அணியில் நந்த்ரே பர்கர் !

ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் நந்த்ரே பர்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளர்.

10 போட்டிகளில் விளையாடியிருந்த சந்தீப் சர்மா, 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ரூ.3.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top