வருண் சக்ரவர்த்திக்கு அபராதம் !

கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறியதாக வருண் சக்ரவர்த்திக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அவரை களத்தை விட்டு வெளியேறுமாறு வருண் சக்ரவர்த்தி சைகை செய்தார். இந்த விவகாரத்திலேயே வருண் சக்ரவர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top