சஞ்சு சாம்சனை விமர்சித்த ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டு தடை

திருவனந்தபுரம்

மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது தொடர்பாகவும், கேரள கிரிக்கெட் சங்கம் குறித்தும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் சில சர்ச்சையான கருத்துகளை கூறியிருந்தார்.

ரஞ்சி கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனை சேர்க்காததால்தான் அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிசிசிஐ தேர்வு செய்யாமல் விட்டது எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கொச்சியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சர்ச்சையான கருத்துகளை கூறிய ஸ்ரீசாந்துக்கு 3 வருடம் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீசாந்த், கேரள கிரிக்கெட் சங்கம் நடத்தி வரும் கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் கொல்லம் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top