மாட்ரிட் ஓபன் இறுதி சுற்றில் கோகோ காஃப், சபலென்கா

மாட்ரிட்

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியா டெக், 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்த்து விளையாடினார்.

64 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கோகோ காஃப் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்த்து விளையாடினார்.

இதில் அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில் கோகோ காஃப் – அரினா சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 15-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top