ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 28) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியின் 2வது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு இந்த மைதானத்தில் ஆர்சிபி 205 ரன்களை குவித்திருந்தது
கேப்டன் ரஜத் பட்டிதார் 32 பந்துகளில், 3 சிக்ஸர்ள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பில் சால்ட் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களும், விராட் கோலி 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும், தேவ் தத் படிக்கல் 14 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் விளாசினர். இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் 8 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் சேர்த்தார்.

