சேப்பாக்கத்தில் ஆர்சிபி கேப்டனாக சாதித்த ரஜத் பட்டிதார்

சென்னை

ஐபிஎல்  டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 28) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. கேப்டன் ரஜத் பட்டிதார் 32 பந்துகளில், 3 சிக்ஸர்ள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் அவரது 8வது அரை சதமாக இது அமைந்தது. மேலும் 12 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் ஆர்சிபி கேப்டனாக சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் 2013ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top