ஆர்சிபி அணியில் கெட் அவுட்; டெல்லி அணியில் ஜாக்பாட்

மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியை கே.எல். ராகுல் ஏற்க மறுத்ததால் அக்சர் படேல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது துணைக் கேப்டனாக தென்னாப்பிரிக்க பேட்டிங் ஜாம்பவான் பேப் டு பிளெசிஸ் நியமிக்கப்பட்டார்.

40 வயதான டு பிளெசிஸ் ஐபிஎல் தொடரின் கடைசி மூன்று சீசன்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தலைமை தாங்கினார். இருப்பினும், கடந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக அவரை ஆர்சிபி தக்கவைக்கவில்லை.

ஆர்சிபி

இந்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் பிளெசிஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தற்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிளெசிஸ் கூறுகையில்,’ நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன்.

டெல்லி சிறப்பாக இருந்தது மற்றும் சிறுவர்கள் அற்புதமாக இருந்தனர். நிச்சயமாக, நான் மகிழ்ச்சியாகவும் தயாராகவும் உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top