கேப்டன் பதவியா, வேண்டாம் கே.எல். ராகுல் ஓட்டம்..! அக்சர் படேலுக்கு அதிர்ஷ்டம்

ஐபிஎல் 2025 போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டும் இன்னும் கேப்டனை அறிவிக்கவில்லை. அணி நிர்வாகத்தின் தேர்வு ரூ. 14 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட கே.எல் ராகுலாக இருந்தது. சாம்பியன் கோப்பையிலும் அவர் இந்தியாவுக்காக அசத்தினார். ஆனால் கடந்த ஆண்டு லக்னோ அணி நிர்வாகத்துடன் நேர்ந்த கசப்பான அனுபவத்தால் கேப்டன் பதவி என்றதும் கே.எல். ராகுல் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு வீரராக அணிக்கு தனது பங்களிப்பை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேப்டன் பதவியை மறுத்தது குறித்து கே.எல் ராகுல் கூறுகையில்,’ நான் யாரிடமும் சென்று பதவி கேட்க மாட்டேன். எனது தலைமைத் திறன் போதுமானது என்று நீங்கள் உணர்ந்தால், நான் எனது கிரிக்கெட்டை விளையாடும் விதத்திலும், என்னைக் கையாளும் விதத்திலும், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நான் கேப்டனாக இருந்த அணியைக் கையாளும் விதத்திலும், நீங்கள் தகுதியானதாகக் கண்டால், நிச்சயமாக நான் மகிழ்ச்சியடைவேன். தற்போது கேப்டன் பதவியில் இருக்க விரும்பவில்லை. அணியில் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன்’ என்றார். கே.எல் ராகுல் இதற்கு முன்பு பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி கேப்டனாக இருந்துள்ளார். 64 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார். அவரது வெற்றி சதவீதம் 48.43.

1 thought on “கேப்டன் பதவியா, வேண்டாம் கே.எல். ராகுல் ஓட்டம்..! அக்சர் படேலுக்கு அதிர்ஷ்டம்”

  1. Pingback: ஆர்சிபி அணியில் கெட் அவுட்; டெல்லி அணியில் ஜாக்பாட் - JUST NEW

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top