ஹரிமோட்டோ

WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 8 பேருடன் களமிறங்கும் 18 தமிழக வீரர், வீராங்கனைகள்

சென்னை, மார்ச் 24, 2025:

WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 தொடரில் பாரிஸ் 2024 மற்றும் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 8 பேருடன் தமிழகத்தைச் சேர்ந்த 18 வீரர்,வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

WTT ஸ்டார் கன்டென்டர் 2025 தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரை ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. உலகின் சிறந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் 600 புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் தொடர் மொத்த பரிசு தொகை ரூ.2.35 கோடியாகும்.

WTT ஸ்டார் கன்டென்டர் தொடரில் முதன் முறையாக ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிக்கு போட்டி தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கர் ஜோடி முன்னிலை வகிக்கிறது.இந்த ஜோடி தோகாவில் நடைபெற்ற WTT ஸ்டார் கன்டென்டர் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் தியா சித்தலே, மனுஷ் ஷா ஜோடி 4-வது இடத்தில் உள்ளது.

WTT ஸ்டார் கன்டென்டர் நிகழ்வில் 19 இந்திய வீரர், வீராங்கனைகள் நேரடியாகவும் வைல்டு கார்டு மூலமும் பிரதான டிராவில் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 82 இந்திய வீரர்கள் (35 ஆண்கள், 47 பெண்கள்) பிரதான டிரா மற்றும் தகுதிச் சுற்றுகளில் போட்டியிடுகின்றனர், இதில் தமிழகத்திலிருந்து (8 ஆண்கள், 10 பெண்கள்), சரத் கமல் மற்றும் சத்தியன் ஞானசேகரன் உட்பட 18 பேர் பங்கேற்கின்றனர். சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

மிவா ஹரிமோட்டோ
மிவா ஹரிமோட்டோ

ஒலிம்பிக் பதக்கம் வென்ற டொமோகாசு ஹரிமோட்டோ (தரவரிசை 3, ஆடவர் ஒற்றையர் , ஜப்பான்) மற்றும் ஹினா ஹயாட்டா ( தரவரிசை 5, மகளிர் ஒற்றையர் , ஜப்பான்) ஆகியோர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டி தரவரிசையில் தரவரிசையில் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவருமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள். அவர்களுடன் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் என்ற மிவா ஹரிமோட்டோ (#6, மகளிர் ஒற்றையர், ஜப்பான்), ஷின் யூ-பின் (#10, மகளிர் ஒற்றையர் , தென் கொரியா), செங் ஐ-சிங் (#11, மகளிர் ஒற்றையர் , சீன தைபே), டூ ஹோய் கெம் (#36, மகளிர் ஒற்றையர் , ஹாங்காங்), லீ யூன்-ஹை (#39, மகளிர் ஒற்றையர் , தென் கொரியா), மற்றும் லிம் ஜோங்-ஹூன் (#43, ஆடவர் ஒற்றையர் , தென் கொரியா) என உலகளாவிய டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்களால் நிரம்பிய கடுமையான போட்டி களத்தை உறுதி செய்கிறது.

சரத் கமல், ஹர்மீத் தேசாய், மானவ் தாக்கர், சத்தியன், மனுஷ் ஷா, ஸ்னேஹித் சுரவஜ்ஜுலா, அங்கூர் பட்டாச்சார்ஜி, மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, யாஷஸ்வினி கோர்படே, அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி, கிருத்விகா ராய், சுஹாசினி சைனி, ஸ்வஸ்திகா கோஷ், தனிஷா கோடேச்சா, முடித் தானி, தியா சித்தலே மற்றும் சிண்ட்ரெலா தாஸ் ஆகியோர் பிரதான டிராவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.

WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 தொடரில் பங்கேற்கும் தமிழக வீரர் வீராங்கனைகளின் விவரம்:

அபிநந்த் பிரதிவாதி, அபிநய் விஜய், அம்ருதா புஷ்பக், அனன்யா முரளிதரன், ஹன்சினி மதன், ஹர்ஷா கலங்கே, ஜியா லக்ஷ்மன், கார்த்திகேயன் சோலையன், காவ்யா பாஸ்கர், மேகன் செந்தில், நித்யா மணி, ப்ரீயேஷ் சுரேஷ், சத்தியன் ஞானசேகரன், செலெனா செல்வகுமார், ஷரத் கமல், ஸ்ரீராம் சிவம், தனுஜா நாகராஜன், யாஷினி சிவசங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top