Snehit

டபிள்யூடிடி: கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சினேகித் சுரவஜ்ஜுலா

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2026 டேபிள் டென்னிஸ்தொடர்
சென்னைமேலக்கோட்டையூரில் உள்ளதமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின்ஆதரவுடன் அல்டிமேட் டேபிள் டென்னிஸ், ஷரத் கமல் அகாடமி மற்றும் ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் AI இணைந்து நடத்துகின்றன.


இதில் இன்று நடைபெற்றஆடவர் ஒற்றையர் பிரிவு 2- வது சுற்றில் இந்தியாவின் சினேகித் சுரவஜ்ஜுலா, போட்டித் தரவரிசையில் 13- வது இடத்தில் ஜப்பானின் மிசுகி ஓகாவாவைஎதிர்த்து விளையாடினார்.

இதில் சினேகித் சுரவஜ்ஜுலா முதல் 2 செட்களையும் 9-11, 15-17 எனஇழந்தார். எனினும் அதன் பின்னர் போராடி அடுத்த 2 செட்களையும் 11-4, 11-6 எனகைப்பற்றினார்.


இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டை சினேகித் சுரவஜ்ஜுலா கடுமையாகபோராடி 18-16 எனதன்வசப்படுத்தினார். முடிவில் 52 நிமிடங்கள் நடைபெற்றஇந்தஆட்டத்தில் சினேகித் சுரவஜ்ஜுலா 3-2 (9-11, 15-17, 11-4, 11-6, 18-16) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளகொரியாவின் ஓஜுன்சுங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார


முன்னதாகஆடவர் இட்டையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் ஜோடி 3-0 (11-7, 11-9, 11-7) என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3- வது இடத்தில் இருந்தபிரான்சின் ஃப்ளோரியன்போர்ராசாட், எஸ்டெபன் டோர் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

அரைஇறுதியில் சத்தியன், ஹர்மீத் தேசாய் ஜோடியானது கொரியாவின் லிம் ஜோங்ஹூன், ஓஜுன்சங் ஜோடியுடன் மோதுகிறது.


கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ்ஜோடி, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சகநாட்டைச் சோந்த மனுஷ் ஷா, தியா சித்தலேஜோடியைஎதிர்த்து விளையாடியது. இதில் பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ்ஜோடி 3-1 (12-10, 1311, 10-12, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top