சிங்கம்…சிங்கம் தான்… 28 பந்தில் 15 மெகா சிக்சர்! டிவில்லியர்ஸ் அசத்தல்

தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி பேட்டிங்கிற்கு சொந்தக்காரர். 360 டிகிரி வீரர் என்று புகழப்படுபவர். ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் லெஜண்ட்ஸ் போட்டியில் டிவில்லியர்ஸ் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் லெஜெண்ட்ஸ் டி20 தொடரில் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வரும் அவர் 28 பந்தில் 15 மெகா சிக்சருடன் 101 ரன் விளாசினார். 2 பந்துகளை மட்டுமே அவர் ரன் எதுவும் எடுக்காமல் வீணடித்தார். அதே சமயம் 15 சிக்சர் விளாசிய அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.


அவரது ஸ்டிரைக் ரேட்டும், 360யாக இருந்தது. அவரது சதத்தால் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன் விளாசியது. அதன்பின் விளையாடிய புல்ஸ் லெஜண்ட்ஸ் அனி 14 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது டிவில்லியர்சின் பேட்டிங் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


இதுபற்றி அவர் கூறுகையில்,’ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றேன். ஏனென்றால் நான் இனி விளையாட வேண்டும் என்று நினைக்கவில்லை. சரி, நேரம் கடந்துவிட்டது, என் இளம் மகன்கள் விளையாட்டை விளையாட ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் அடிக்கடி தோட்டத்தில் விளையாடி வருகிறோம். இந்த ஆட்டம் மூலம் ஒருவித சுடர் மீண்டும் எரிந்தது போல் உணர்கிறேன். ஜூலை மாதம் நடக்கும் லெஜண்ட்ஸ் உலக கோப்பைக்கு நான் தயாராக இருப்பேன்’ என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top