பாரிஸ்
பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் நிகோலா மெக்டிக், நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-7(4), 7-6(7), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியது.