குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் கிரண், தீபக்

பாங்காக்

தாய்லாந்து ஓபன் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் கிரண், தீபக் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 75 கிலோ எடை பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் 5-0 என்ற கணக்கில் உக்ரைனின் போலினா செர்னென்னை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Deepak

ஆடவருக்கான 75 எடை பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் தீபக் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் பீரபட் யாசுவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top