virat 12b

விராட் கோலியின் சாதனை பட்டியல் !

* 2011-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ஜமைக்காவில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் விராட் கோலி.

* 2012-ம் ஆண்டு ஜனவரியில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை விளாசியிருந்தார் விராட் கோலி.

virat thanks

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களில் அதிக முறை இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

* 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் போது கேப்டனாக பொறுப்பேற்றார் விராட் கோலி. அந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 115 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 141 ரன்களும் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

* ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21-ம் சுழற்சியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தை பிடித்திருந்தது.

virat csk

* விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் தொடர்ச்சியாக 42 மாதங்கள் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

* உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 11 தொடர்களில் 10-ஐ வென்று அசத்தியது.

* விராட் கோலி சாதனைகளில் மணிமகுடமாக 2018–19–ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2–1 என வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றது அப்போதுதான். இதன் மூலம் 71 வருட காத்திருப்புக்கு முடிவு கிடைத்திருந்தது.

* அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய சாதனை விராட் கோலி வசம் உள்ளது. அவரது தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடி 40 வெற்றிகளை குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய கேப்டன்களில் அதிக வெற்றியை தேடிக்கொடுத்தவர் என்ற சாதனையும் விராட் கோலி வசமே உள்ளது.

* இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலியின் வசம் உள்ளது. அவர், 68 போட்டிகளில் கேப்டனாக இருந்து 54.80 சராசரியுடன் 5,864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 20 சதங்கள், 18 அரை சதங்கள் அடங்கும்.

* 2019-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 254* ரன்கள் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

* ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் பட்டியலில் விராட் கோலி (9,230 ரன்கள்) 4-வது இடத்துடன் தனது 14 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் (15,921), ராகுல் திராவிட் (13,265), சுனில் கவாஸ்கர் (10,122) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top